Sneezing and Stress : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Sneezing and Stress :

🔹️ நமது காற்று தவிர வேறு எந்த வெளிப் பொருளும் மூக்கில் நுழைந்தால், நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கும் செயல்தான் தும்மல் எனப்படுகிறது.

🔹️ மூச்சுக்குழலில் ஏதேனும் வெளிப்பொருள் சென்றாலோ உறுத்தல் ஏற்பட்டாலோ அங்குள்ள கோழை படலம் அந்நிய பொருளின் மீது கோழையை சுரந்து அதனை மூச்சுக் குழலில் இருந்து அதிவேகத்தில் வெளியேற்றும். இந்த செயலையே நாம் தும்மல் என்கிறோம்.

🔹️ தும்மல் வரும்போது முகத் தசைகள் இறுக்கமடைகின்றன. கண்களை பாதுகாப்பதற்காக இமைகள் மூடிக் கொள்கின்றன.

தும்மல் நீடித்தால் கண்ணீர் சுரப்பிகள் நீரை சுரந்து கண்களை ஈரம் பதத்துடன் வைத்திருந்து அதிர்ச்சியிலிருந்து காக்கின்றன.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களின் உறங்கும் நிலையில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ளலாமா?

🔹️ உண்மையில் தும்மல் என்பது ஒரு எச்சரிக்கைதான். சளி, ஜலதோஷம் சைனஸ், வைரஸ் தொற்று ஆகியவை வரப்போகின்றன என்பதற்கான அறிகுறியே தும்மல் ஆகும்.

🔹️ சிலருக்கு தும்மல் வந்தால் உயிரே போகும் அளவிற்கு மார்பு விலா எலும்புகளும் வலிக்கும். இவை அனைத்தும் நம்மை எச்சரிக்கை படுத்துகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

🔹️ குறிப்பு: தும்மலின் வேகத்தை குறைக்க வழி செய்ய வேண்டுமே தவிர அடக்கக் கூடாது. தும்மலை அடக்கினால் நுரையீரல் பாதிப்பு வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here