snake inside flight cockpit
snake inside flight cockpit

தென்னாபிரிக்காவில் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானியின் அறையில் பாம்பின் தலை ஒன்று எட்டிப் பார்த்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறப்படும் நிலையில் பாம்பு என்றாலே அனைவருக்கும் உயிர் பயம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் வொர்செஸ்டர் என்ற நகரத்தில் இருந்து நெல்ஸ்ரூயிட் என்ற நகரத்தை நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. 100 பயணிக்கும் மேற்பட்ட நபர்கள் இதில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் இரவில் விளக்குகள் அணைக்கப்பட்டு பயணிகள் உறங்கி விட்டனர்.

நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் விமானம் சுமார் 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானி தனது சீட் அருகே ஏதோ சத்தம் வந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் திரும்பி பார்த்தபோது பாம்பு ஒன்று மெல்ல தலையை எட்டிப் பார்த்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த பாம்பு முழுவதுமாக வெளியே வந்து படமெடுத்த போது தான் அது ’கேப் கோப்ரா’ என்ற வகை கொடிய விஷப் பாம்பு என்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக அருகில் உள்ள விமான நிலையத்தில் விவரத்தை கூறி விமானம் தரையிறங்க அனுமதி கேட்டார். இந்த தகவல் விமான பயணிகள் மத்தியில் தெரிந்தவுடன் விமானத்திற்குள் பாம்பா? என அதிர்ச்சியில் பயணிகள் அலறினர்.

இந்த நிலையில் மிகவும் புத்திசாலித்தனம் விமானத்தை உடனடியாக தரையிறக்கிய விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் கொடுத்தார். அப்போது தயாராக நின்றிருந்த வனத்துறையினர் உடனடியாக விமானி அறையில் பதுங்கியிருந்த விஷபம்பை பிடித்தனர். இதனை அடுத்து பாம்பு தன் அருகில் படம் எடுத்து இருந்தபோதிலும் புத்திசாலித்தனமாக பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுக்கள் புகுந்து வருகிறது.