Smith to captain Australia again
ஆஸ்திரேலிய அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஸ்மித் தடைக்கலாம் முடிந்து விளையாடி வருகிறார். தற்போது மீண்டும் அவரை கேப்டனாக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

Smith to captain Australia again : ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். கடந்த 2018-ல் இவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

அப்போது கேப் டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது ஆஸ்திரேலிய அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மாட்டியது.

இதில் கேப்டனாக பணியாற்றிய ஸ்மித்திற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்த பின் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 379 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் களம் இறங்கிய ஸ்மித் 774 ரன்கள் குவித்து அசத்தினார். அத்துடன் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

இதனை தொடர்ந்து ஸ்மித் மீண்டும் கேப்டனாக வருவாரா? என்ற கேள்வி பரவலாக கேட்க்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டும் கேப்டனாக பணியாற்ற முன்னாள் வீரர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here