Smith clashes with Virat Kohli
Smith clashes with Virat Kohli

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தார் ஸ்மித்.

தென்ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலி மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 25-க்கு மேல் இருந்தது.

இந்நிலையில் இந்தியா – வங்காளதேசம், ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது.

வங்காளதேசம் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதேவேளையில் ஸ்மித் பிரிஸ்பேன் டெஸ்டில் ஏமாற்றம் அளித்தார்.

இந்நிலையில், வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் 931 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 928 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.