தியேட்டர்கள் திறப்பை எதிர்நோக்கி 50 சிறு பட்ஜெட் திரைப்படங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அது குறித்த சில தகவல்களை பார்க்கலாம் வாங்க ‌‌.

Small Budget Movies Release : இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தனுசின்” கர்ணன் ” கார்த்தியின் ” சுல்தான் ” பெரிய படங்கள் உட்பட சிறு முதலீட்டுப் படங்கள் திரைக்கு வந்து கொண்டிருந்தன.

கொரோனா உச்சத்தை தொட ஆரம்பித்த உடன் படங்களின் ரிலீசுக்கு தடை வந்தது.

தியேட்டர்கள் திறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் 50 சிறு பட்ஜெட் திரைப்படங்கள்

காகித பூக்கள், உழைக்கும் கரங்கள், சினிமா கனவுகள், இளஞ்ஜோடிகள், இது கதை அல்ல நிஜம், வீரமகன், இளவரசி, வைரி, சில்லாட்ட, பூதமங்கலம் போஸ்ட் , டம்மி ஜோக்கர், பிரம்மபுரி, வாழ்க ஜனநாயகம், இரவா இரவு , உத்ரா, கபாலி டாக்கீஸ், எல்லைக்காவலன், பிறர்தர வாரா, சின்ன பண்ணை பெரிய பண்ணை, நெஞ்சாக்கூட்டில், வெற்றித்திருமகன், என 50 படங்கள் திரையரங்குகள் திறக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

கொரோனா காலம் முடிந்த உடன் படங்களை ரிலீஸ் செய்வது குறித்து தயாரிப்பாளர்கள்., வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கூடிப்பேச வேண்டும் என்று திரை உலகினர் எதிர்பார்க்கின்றனர் என்கிறார் சீனியரான அந்த இயக்குனர்.