Sleeping Tips For Pregnancy Womens : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Sleeping Tips For Pregnancy Womens :

🔹️ பெண்களின் கர்ப்ப காலம் தொடங்கியது முதல் அவர்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படும்.

கர்ப்பமான பெண்கள் தன்னுடைய இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்றே வேறுபட்டு உணவு முறைகளில் இருந்தும், உறங்கும் முறைகளில் இருந்தும் நிறைய மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

🔹️ கர்ப்பிணிப் பெண்களுக்கு உறங்குதல், சாப்பிடுதல் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றில் பெருமளவிற்கு மாற்றங்கள் ஏற்படும்.

🔹️ முதல் 3 மாதகாலம்:

கர்ப்பத்தின் போது முதல் 12 வாரம் வரை பெண்களுக்கு பகலில் தூங்குவது அதிகமாக இருக்கும்.

இரவிலே தூக்கம் என்பது குறைவாக இருக்கும். அடிக்கடி இரவில் கண் விழிப்பார்கள். இந்த மூன்று மாத கால கட்டத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் உறக்கமின்மை, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

🔹️ இரண்டாவது 3 மாதகாலம்:

கர்ப்பத்தின் அடுத்த 13-28 வாரகாலம், சற்று இயல்பான உறக்க நிலை இருக்கும். பகலில் தூக்கம் குறைவாக இருக்கும் இரவில் ஓரளவிற்கு நல்ல தூக்கம் ஏற்படும்.

கண்கள் உப்பியிருத்தல், முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி? தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

இக்கால கட்டத்தில், வயிற்றுவலி, மூக்கடைப்பு, நெஞ்செரிச்சல், குறட்டை போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

🔹️ மூன்றாவது 3 மாதகாலம்:

கர்ப்பத்தின் கடைசி 29 வாரம், மீண்டும் முதல் மூன்று மாத கால கட்டத்தின் நிலையே ஏற்படும். பகலில் தூக்கம் அதிகமாக இருக்கும்.

ஆனால் இரவில் தூக்கம் வருவது என்பது கடினமான ஒன்றாக இருக்கும். இக்கால கட்டத்திலும், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உறக்கமின்மை, நெஞ்செரிச்சல், மூட்டுவலி மற்றும் கால் வலி போன்றவை ஏற்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here