SK Shooting Spot

SK13 Shooting Spot : SK13 படப்பிடிப்பில் சுட்டி குழந்தை ஒன்று நயன்தாராவுடன் சேர்ந்து செய்த சேட்டை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் கலகலப்பான காமெடி கலந்து காதல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது வெளிநாடுகளில் நடந்து வருகிறது.

இதனால் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாராவுடன் சுட்டி குழந்தை சென்று செமையாக கலாட்டா செய்துள்ளது.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.