SK16 Release Details
சிவகார்த்திகேயனின் அடுத்த படமும் முன்னணி நடிகருடன் மோத இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

SK 16 Release Details : தமிழ் சினிமாவில் துணை நடிகராக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகராக தடம் பதித்து இருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை படத்திலும் நேற்று இன்று நாளை இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

அதே போல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

அணு இம்மானுவேல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை படக்குழு ஆயுத பூஜை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய உள்ளது. இதே தினத்தில் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அசுரன் படத்தையும் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷுக்கு இடையே கடும் போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.