SK 15

SK 15 : சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அதே போல் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா எனவும் எடிட்டர் ரூபன் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இரும்புத்திரை கூட்டணி அப்படியே சிவகார்த்தியேனுடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.