SK 14
SK 14 படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று SK 14.

நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்த படம் சைன்ஸ் பிக்சன் படமாக உருவாகிறது. இந்த படத்தை 24 AM ஸ்டுடியோஸுடன் KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என கூறப்பட்டுவந்தது , அதன் படி இப்படத்திற்கு அயலான் என டைட்டில் வைத்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.