SK 14

SK 14 Update : நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இதில் இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படமும் ஒன்று. ஏலியன் கான்செப்டில் வித்தியாசமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க? ஸ்ருதி ஹாசனின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தயாரிப்பில் இருக்கும் இப்படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியே வராததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் டிவிட்டரில் ரசிகர் ஒருவர் இதுகுறித்து கேட்டதற்கு இயக்குநர் ரவிக்குமாரே அதற்கு பதிலளித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரவிக்குமார், அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் டைட்டில் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும் ஆர்வம் குறையாமல் பொறுமை காத்து ஆதரவு தாருங்கள் என்றும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.