Sivakarthikeyan SK 13

SK 13 Title : சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் இறுதியாக வெளியான சீமராஜா படத்தை தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் ராதிகாவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

அதே சமயம் இப்படத்திற்கு Mr.லோக்கல் என டைட்டில் வைத்து இருப்பதாகவும் பேசப்பட்டு வந்தது. தற்போது வெளியாகியுள்ள அதிகர்பூர்வ அறிவிப்பு அதனை உறுதி செய்துள்ளது.

ஆம், இந்த படத்தின் டைட்டில் Mr. லோக்கல் தான் என படக்குழு அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.