எஸ் ஜே சூர்யா அவர்கள் மீண்டும் இயக்குனராக இருப்பதாகவும் அவருடைய அடுத்தப் பட ஹீரோ யாராக இருக்கும் என்பது பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.

SJ Surya in Next Direction Update : தமிழ் சினிமாவில் வாலி, குஷி என பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் எஸ் ஜே சூர்யா. இவர் தற்போது நடிகராக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

ஹீரோவாக இவரது நடிப்பில் அடுத்ததாக பொம்மை, இராக்காலம் உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளன. மேலும் சிவகார்த்திகேயனுடன் டான், சிம்புவுடன் மாநாடு உள்ளிட்ட படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களில் எஸ் ஜே சூர்யாவின் கெட்டப் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

மீண்டும் இயக்குனராகும் எஸ் ஜே சூர்யா? அடுத்த ஹீரோ இவரா? - எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்

இந்த படங்களை முடித்துவிட்டு எஸ் ஜே சூர்யா மீண்டும் இயக்குனராக படம் இயக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிப்பார் என தகவல் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து விசாரிக்க எஸ்பி சூர்யா அடுத்து படம் இயக்க வாய்ப்பு இல்லை. அவர் நடிகனாக திரையுலகில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க முயன்று வருகிறார். விஜய் சேதுபதி இயக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என தெரிய வந்துள்ளது.