பல வருடங்களுக்குப் பிறகு அஜித்தை சந்தித்துள்ளார் எஸ். ஜே சூர்யா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கிவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு அஜித்தை சந்தித்துள்ளார்.எஸ் ஜே சூர்யா, அதனை புகைப்படத்துடன் வெளியிட்டு பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், எனது வழிகாட்டியுடன் பல வருடங்களுக்குப் பிறகு மகிழ்ச்சியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.