Sixer Movie Review : Sixer Movie Review, Vaibhav, Radha Ravi, Sathish, Pallak Lalwani, Ghibran, Sixer Movie Trailer , Tamil Cinema, Latest Cinema Review
இன்று வைபவ் நடிப்பில் வெளியாகியுள்ள சிக்சர் படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம் வாங்க.

Sixer Movie Review :

சாச்சி இயக்கத்தில் ஆர். தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோரின் தயாரிப்பில் வைபவ், சதிஷ், ராதா ரவி, பல்லக் லால்வானி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சிக்சர்.

படத்தின் கதைக்களம் :

வைபவ்விற்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது, ஆனால் இது அவருடைய நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் மட்டும் தான் தெரியும். அப்படியிருக்க இவர் ஒருமுறை நண்பர்களுடன் பீச்சிற்கு செல்கிறார்.

அங்கு நடக்கும் போராட்டத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ தலைமை தாங்கி விடுகிறார், இதனால் பாதிக்கப்பட்ட எம்.எல். ஏ ஒருவர் இவரை கொல்ல முயற்சி செய்கிறார்.

இது புறம் இருக்க இவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதால் படத்தின் நாயகி இம்ப்ரெஸ்ஸாகி வைபவ்வை காதலிக்கிறார். இவருக்கு தனக்கு மாலை கண் நோய் இருப்பதை மறைத்து காதலிக்கிறார்.

அதன் பின்னர் என்ன நடக்கிறது? இவர்களின் காதல் சேர்கிறதா? எம்.எல்.ஏ-விடம் இருந்து தப்பிக்கிறாரா? என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

வைபவ் எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் இந்த படத்திலும் அப்படி தான் வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார். கண் தெரியாதவராகவே வாழ்ந்துள்ளார்.

மற்ற நடிகர் நடிகைகளும் அவர்களின் காதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

ஜிப்ரானின் வழக்கமான இசை படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது.

ஒளிப்பதிவு :

முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

எடிட்டிங் :

ஜோமினின் எடிட்டிங் ஓகே.. இன்னும் தேவையில்லாத சில காட்சிகளுக்கு கத்தரி போட்டிருக்கலாம்.

ஷங்கரை மிஞ்சிய அட்லீ.. பிகிலால் இத்தனை கோடி இழந்தாரா? – ஷாக்கிங் அப்டேட்.!

இயக்கம் :

சாச்சி படத்தை முழுக்க முழுக்க காமெடி படமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்து லாஜிக் எல்லாம் பார்க்காமல் நம்மை சிரிக்க வைக்க வேண்டும் என்பதை மட்டுமே நினைவில் வைத்து இயக்கியுள்ளார். அதில் ஜெயித்தும் காட்டி விட்டார்.

தம்ப்ஸ் அப் :

1. வைபவின் நடிப்பு
2. காமெடி
3. இசை
4. ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக் தவறுகள்

REVIEW OVERVIEW
சிக்ஸர் விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
sixer-movie-reviewமொத்தத்தில் சிக்ஸர் சிரித்து மகிழ சிறந்த படம்