vikram lander
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Sivan confimed ISRO found Vikram lander  – நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவிலேயே தயாரான சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜுலை 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

சுற்றுவட்டப்பாதையில் சரியாக பயணித்த சந்திராயன் 2-வின் விக்ரம் லேண்டர் விண்கலம் நேற்று முன்தினம் அதிகாலை நிலவில் தரையிறங்குமாறு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனவே, விக்ரம் லேண்டிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தழுதழுத்த குரலில் அறிவித்தார். அதன்பின் அவருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். மேலும், இதுவே வெற்றிதான். இந்தியா எப்போதும் விஞ்ஞானிகள் பக்கம் நிற்கும் எனவும் தெரிவித்தார்.

கள்ளக்காதல் விவகாரம் – திருமணமாகி ஒரே வாரத்தில் இளம்பெண் படுகொலை

இந்நிலையில், விக்ரம் லேண்டரின் இருப்பிடம் தற்போது தெரியவந்துள்ளது. இதை சிவன் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். எனவே, அதிலிருந்து தகவல் தொடர்பை பெறும் முயற்சியில் சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த செய்தி இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.