சிவக்குமாராக சபதத்தில் ஜெயித்தாரா ஆதி? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

Sivakumar Sabatham Movie Review : ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பு இயக்கம் இசை மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் சிவகுமார் சபதம். இந்த படத்தில் சிவகுமார் இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆதி.

காஞ்சிபுரத்தில் பட்டு நெசவுத் தொழில் செய்து வந்தார் வரதராஜன். இவருடன் வேலை செய்து வருபவர் சந்திரசேகர். சூழ்ச்சியால் சென்னையில் துணி கடை ஒன்றை ஆரம்பிக்கிறார். வரதராஜன் மகன் முருகன் சந்திரசேகரின் பெண்ணை திருமணம் செய்துகொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக விடுகிறார். ஒரு கட்டத்தில் சந்திரசேகர் மாப்பிள்ளை முருகனை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். முருகன் உடனிருக்கும் சிவகுமார் ( ஆதி ) சந்திரசேகரிடம் சபதம் ஒன்றை போடுகிறார். அப்படி ஆதி போட்ட சபதம் என்ன? அவருடைய சபதத்தில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை களம்.

இன்றைய ராசி பலன்.! (1.10.2021 : வெள்ளிக் கிழமை)

சபதத்தில் ஜெயித்தாரா ஆதி?? சிவகுமாரின் சபதம் விமர்சனம்.!!

படத்தை பற்றிய அலசல் :

ஹிப்ஹாப் ஆதி வழக்கமாக காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். இருப்பு இயக்கம் நடிப்பு தயாரிப்பு இசை என பெரும்பாலான வேலைகளை அவரே அமைத்ததால் அனைத்தும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.

ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ள மாதுரி அவருக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளார். படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்கள் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Trailer-ல இருக்குற அளவுக்கு ஒன்னுமே இல்ல – Rudra Thandavam Public Review | Rishi Richard

சில இடங்களில் காமெடி காட்சிகள் ரசிக்க வைத்தாலும் பல இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. காமெடி காட்சிகள் சீரியஸாக சீரியஸ் காட்சிகள் காமெடி ஆகும் சில இடங்களில் அமைந்துள்ளன. ‌‌‌‌‌

தொழில்நுட்பம் :

இசை : பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் கேட்கும் ரகம்.

ஒளிப்பதிவு :

அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. காட்சிகளை தெளிவாகவும் அழகாகவும் படமாக்கியுள்ளார்.

இயக்கம் :

ஹிப்ஹாப் ஆதி முதல் பாதியில் திரைக்கதை ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இரண்டாம் பாதியில் ஆம் தேதி தெளிவு கிடைக்கும் என பார்த்தால் அதிலும் ஏமாற்றம்.

தம்ஸ் அப் :

1. ஹிப் ஹாப் ஆதி நடிப்பு

2. இசை

3. ஒளிப்பதிவு

4. படத்தின் கதை

தம்ஸ் டவுன் :

1. திரைக்கதை

2. லாஜிக்கல் தவறுகள்