ஜெய்பீம் சபையால் சூர்யா சிவகுமார் இடையே பிரச்சனை வெடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sivakumar Opinion on JaiBhim Controversy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் ஆதரவு, எதிர்ப்பு என இரண்டையும் சரிசமமாக சந்தித்து வருகிறது.

ஜெய்பீம் சர்ச்சையால் சூர்யா, சிவகுமார் இடையே வெடித்த பிரச்சனை - சிவகுமாரின் அமைதிக்கு இது தான் காரணமா??

படத்தில் வன்னியர்களை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதாக வன்னியர்கள் சங்கம் தொடர்ந்து சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் சிவகுமார் தன்னுடைய மகனான சூர்யாவிடம் படத்தை தயாரிக்கும் போது இதுபோன்ற காட்சிகளை தவிர்த்து இருப்பது அவசியம். இப்படி ஒரு சமூகத்தினரை பகைத்துக் கொள்வது நல்லதல்ல, உடனே வருத்தம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

இராமாயணமும் அக்னி தீர்த்தமும்.!

ஜெய்பீம் சர்ச்சையால் சூர்யா, சிவகுமார் இடையே வெடித்த பிரச்சனை - சிவகுமாரின் அமைதிக்கு இது தான் காரணமா??

ஆனால் நடிகர் சூர்யா இதனை ஏற்காமல் ஏதேதோ அறிக்கை வெளியிட அது சிவகுமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் இனிவரும் சூர்யா கார்த்தி உள்ளிட்டோரின் படங்களுக்கு பிரச்சனை ஏற்படும் என அவர் பயம் கொண்டுள்ளார். சூர்யா தன்னுடைய பேச்சை கேட்காமல் இருந்தது அவர் இந்தப் பிரச்சனையில் இதுவரை தலையிடாமல் இருப்பதற்கான காரணம் என சொல்லப்படுகிறது.

படம் தியேட்டரில் வந்த தான் Value-ஆ இருக்கும் – Actress Nikki Galrani Speech | Rajavamsam Press Meet

அதன் பிறகுதான் நடிகர் சூர்யா இயக்குனர் ஞான வேலை தொடர்பு கொண்டு அவரது தரப்பில் இருந்து வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு சொன்னதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் திரையுலகைச் சேர்ந்த வன்னியர் ஒருவர் இந்த பிரச்சனை குறித்து தன்னுடைய சமூகத்தாரிடம் கேட்க அவர்கள் இதற்கு ஆரம்பத்திலேயே முடித்து வைத்திருக்க வேண்டும்.

சூர்யா ஒரு மன்னிப்பு கேட்டு இருந்தால் எல்லாம் சரியாக போயிருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இப்போது படத்தை OTT-ல் மட்டுமே வெளியிட்டு விட முடியாது. திரையரங்குகளில் அவர்களின் படங்கள் வெளியாகும்போது தான் இந்த பிரச்சனையில் விளைவு தெரியும். வன்னியர் இனத்தைச் சார்ந்த இளைஞர்கள் அவ்வளவு எளிதானவர்கள் இல்லை. இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதை நாங்கள் சமாதானமாக எடுத்துக் கொள்கிறோம். இதுவே சூர்யா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தால் அது இன்னும் ஆறுதலாக இருந்திருக்கும் என அவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.

ஜெய்பீம் பிரச்சனை சூர்யாவின் குடும்பத்துக்குள்ளேயே இப்படி ஒரு பூகம்பத்தை கிளப்பும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.