Sivakarthikeyan 
 Sivakarthikeyan 

 Sivakarthikeyan  : தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனாக வளர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் மீது சந்தானத்திற்கு இப்படியொரு வெறுப்பா? வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

இதுபோக இவர் ஏற்கனவே நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 17-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இது இல்லாமல் விக்னேஷ் சிவன், பாண்டிராஜ், நெல்சன் என அடுத்தடுத்து பல படங்களில் சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.

 Sivakarthikeyan

இதில் பாண்டிராஜ் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா ஒப்பந்தமாகி உள்ளாராம். இவர் அண்மையில் வெளியான 2.0 படத்தின் கேமிராமேன் என்பது குறிப்பிடத்தக்கது.

வருங்கால மாமியாருடன் நயன்தாரா – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

ஹீரோ படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன், அதன்பிறகே இப்படத்தில் நடிக்கிறார்.

இப்படம் கடைக்குட்டி சிங்கம் பாணியில் கிராமத்து கதையைக் கொண்டு உருவாகி வருகிறது.