Sivakarthikeyan with Dhruv in Aditya Verma Lastest Update

துருவுடன் இணைந்த சிவகார்த்திகேயன், படத்தில் தொடரும் பிரபலங்களின் அதிரடி சேர்ப்பு விரைவில் களத்தில் ஆதித்ய வர்மா படம்.

Sivakarthikeyan in Aditya Varma : நடிகர் விக்ரமின் மகன் துருவ். அவரின் முதல் அறிமுக தமிழ் படம் ஆதித்ய வர்மா என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த படம் ஒரு ரீமேக் படம். தனது முதல் படமே ரீமேக் படமாக இருக்கிறதே என்று நினைக்காமல் தனது முழு உழைப்பையும் போட்டு நடித்து உள்ளார் துருவ்.

இந்த படம் தெலுங்கு மொழியில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் ஆகும்.

நயன்தாரா பாடலை அழகாக பாடும் துருவ் விக்ரம் – அப்படியே ஜோடியும் சேருவாங்களோ?

அர்ஜுன் ரெட்டி படம் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது, அந்த படமும் நல்ல வசூலையும் நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளை தொடர்ந்து தமிழ் மொழில் இந்த படம் எந்த அளவிற்கு விமர்சனத்தையும், வசூலையும் பெற்று தர போகிறது என்பதில் பட குழு ஆர்வத்துடன் உள்ளது.

இந்த நிலையில் ஆதித்ய வர்மா படத்தின் கதாநாயகனான துருவ் இந்த படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார். அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து, ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி படக்குழு அளித்துள்ளது. முன்னதாக கோலமாவு கோகிலா படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி அதனை அனிருத் பாடிய எனக்கு கல்யாண வயசுதான் வந்துடிச்சிடி என்ற பாடல் மிக பெரிய அளவில் ஹிட் ஆனது.

அதே கூட்டணி இப்பொது ஆதித்ய வர்மா படத்திலும் இணைந்து உள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியும் அதனை அனிருத் பாடியும் உள்ளார். கோ.கோ. படத்தில் கிடைத்த வெற்றியை போலவே ஆதித்ய வர்மா படத்திலும் இவர்களின் கூட்டணி ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.