Sivakarthikeyan vs Santhanam
Sivakarthikeyan vs Santhanam

Sivakarthikeyan vs Santhanam – எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ஹிப்ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் சில காரணங்களால் இப்படம் மே 17ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிகர்கள் ஜீவா, ஆர்யா, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இவர்கள் அனைவரும் ராஜேஷ் படங்களில் ஹீரோக்களாக நடித்தவர்கள்.

இவர்கள் போக தனது ஆஸ்தான நண்பர் சந்தானமும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவேண்டும் என ராஜேஷ் விரும்பினாராம்.

ஆனால் சிவகார்த்திகேயன் படம் என்பதால் இதை சந்தானம் மறுத்துவிட்டாராம்.

ஏற்கனவே இவர்களுக்குள் தொழில்முறையில் போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.