Siva Vs Sethu

Siva Vs Sethu : விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளதாம்.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே டீசர் வெளியாகிவிட்ட நிலையில் இப்படம் மே 16-ம் தேதி வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கிடைத்திருக்கும் புது தகவலின் படி இப்படம் இரண்டு வாரம் முன்னதாக அதாவது மே 3-ம் தேதியே வெளியாகி விடுமாம்.

அஜித் பிறந்தநாளில் கமல் தரும் ஸ்பெஷல் விருந்து – என்னன்னு நீங்களே பாருங்க!

மே முதல் தேதி வெளியாகவிருந்த சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் தள்ளி போவதால் தான் இந்த முடிவை சிந்துபாத் படக்குழு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இது போக கடைசி விவசாயி, மாமனிதன், சேரா நரசிம்ம ரெட்டி, சங்கத் தமிழன் என அதிகபட்சமாக இவருடைய நடிப்பில் இந்த ஆண்டு ஏழு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.