அந்த டாப் ஹீரோ படத்தை முடிச்சிட்டு வாங்க என சிவகார்த்திகேயன் இயக்குனருக்காக தன் பட வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளார்.

Sivakarthikeyan Upcoming Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானதை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

மேலும் தற்போது இவரது நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கவிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அந்த டாப் ஹீரோ படத்தை முடிச்சிட்டு வாங்க.. விட்டுக் கொடுத்த சிவகார்த்திகேயன் - உச்சகட்ட கொண்டாட்டத்தில் இளம் இயக்குனர்

இந்த படங்களை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருந்தார். தற்போது தேசிங்கு பெரியசாமிக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையறிந்த சிவகார்த்திகேயன் தேசிங்கு பெரியசாமிக்கு போன் செய்து ஒருவேளை ரஜினி பட வாய்ப்பு கிடைத்தால் அதனை முடித்து விட்டு வாங்க. ஆனால் கண்டிப்பாக அடுத்த படம் என்னுடையதாக தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் ரஜினியின் அழைப்புக்காக விழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டுள்ளார் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி.