ட்விட்டரில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுக்க இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் SK21 திரைப்படத்தில் நடிக்க இருக்கும் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் தான் சிறிது காலம் ட்விட்டரில் இருந்து பிரேக் எடுக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அந்தப் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், என் அன்பு சகோதர சகோதரிகளே,
ட்விட்டரில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்து வருகிறேன். கவனித்துக் கொள்ளுங்கள், நான் விரைவில் வருவேன் என தெரிவித்திருக்கிறார். மேலும் அதில், தனது படங்களுக்கான தகவல்களை எல்லாம் எனது படகுழுவினர்களால் எனது ட்விட்டர் கணக்கில் பகிரப்படும் என்பதையும் குறிப்பிட்டு விமானத்தில் இருக்கும் புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கிறார். இதற்கு ரசிகர்களும் விரைவில் திரும்பி வரும்படி கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.