
டான் திரைப்படம் கொடுத்த வசூல் காரணமாக சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய விடாமுயற்சியால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் இறுதியாக டான் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் 116 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதன் காரணமாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான சம்பளத்தை 50 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் ஒரேடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.