ப்ளூ சட்டை மாறன் குரலில் டான் படத்திற்கு தானே விமர்சனம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan Review in Blue Sattai Voice : தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன்.

ப்ளூ சட்டை மாறன் குரலில் டான் படத்திற்கு தானே விமர்சனம் செய்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ

இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து மற்ற நடிகர்கள் போல மிமிக்ரி செய்து பேசியுள்ளார்.

அப்போது இந்த படத்திற்கு நீங்களே விமர்சனம் செய்தால் என்ன செய்வீர்கள் என கேட்க சிவகார்த்திகேயன் ப்ளூ சட்டை மாறன் குரலில் விமர்சனம் செய்துள்ளார். இந்தப் படத்தில் எல்லா விதமான எமோஷனல் இருக்கு, ஆனா எதுக்கு இருக்குனு கேட்காதீங்க குடும்பத்தோடு போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க என கூறியுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் குரலில் டான் படத்திற்கு தானே விமர்சனம் செய்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.