SIVAKARTHIKEYAN

Sivakarthikeyan’s Gaja Relief : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் பெரும் தொகையை நிதியுதவி அளித்துள்ளார்.

சமீபத்தில் உருவாகி இருந்த கஜா புயல் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் வழியாக கரையை கடந்தது. இதனால் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

பல்லாயிர கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து பரிதவித்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதில் இருந்தும் தன்னார்வல தொண்டர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

திரையுலகை சேர்ந்து பிரபலங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்து வருகின்றனர். சூர்யா. விஜய் சேதுபதி, ஜி.வி பிரகாஷ் போன்ற நடிகர்களும் உதவி செய்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்காக ரூ 10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். மேலும் 10 லட்சத்திற்கான நிவாரண பொருட்களையும் கொடுத்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பல நடிகர் நடிகைகள் உதவி வருகின்றனர். விரைவில் டெல்டா பகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வர வேண்டும் என இறைவனை வேண்டி வருகின்றனர்.

அதே சமயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை உடனடியாக தமிழ் அரசு செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here