தமிழ் சினிமாவில் அஜித், விஜய் கூட செய்யாத சாதனையை செய்து காட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டான். லைக்கா நிறுவனத்தின் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சிபிச்சக்கரவர்த்தி படத்தை இயக்கியிருந்தார்.
அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்திக்கு இதுதான் முதல் திரைப்படம். முதல் திரைப்படத்திலேயே 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிப்பு 100 கோடி ரூபாய் வசூலைக் கொடுத்த முதல் நபர் என்ற பெருமையை சிவகார்த்திகேயன் பதிவு செய்துள்ளார்.
இதுவரை அஜித், விஜய் கூட இப்படி ஒரு சாதனையை செய்யாத நிலையில் சிவகார்த்திகேயன் செய்திருப்பது அவரது ரசிகர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது. இதன் மூலம் பெரிய நடிகர்களும் திறமையான அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.