Sivakarthikeyan 14
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிக்கும் படத்தின் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக. மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக வலம் வந்து அதன் பின்னர் திரையுலகில் காமெடி வேடங்களில் நடித்து இன்று ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது தன்னுடைய கை வசமாக அரை டஜன் படங்களை வைத்து கொண்டிருக்கிறார், இறுதியாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற நம்ம வீட்டு பிள்ளை படத்தை அடுத்து ஹீரோ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு சிவாவும் ரகுல் ப்ரீத் சிங்கும் இணைந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே படப்பிடிப்புகள் தொடங்கி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் ஜனவரி 2020-ல் தொடங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.