சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதை காலத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய திரைப்படம் குறித்த டைட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு “கொட்டுக்காளி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகனாக சூரி நடிக்க கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடிக்கவுள்ளார். இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் போஸ்டரை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.