Sivakarthikeyan
Sivakarthikeyan

Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனாக வளர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா – ஒரே படத்தில் அடித்த ஜாக்பாட்!

இதுபோக இவர் ஏற்கனவே நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இது இல்லாமல் விக்னேஷ் சிவன், பாண்டிராஜ், நெல்சன் என அடுத்தடுத்து பல படங்களில் சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் இன்னொரு இளம் இயக்குனரிடமும் சிவகார்த்திகேயன் கதை கேட்டுள்ளாராம்.

Sivakarthikeyan

விஷால் நடிப்பில் அயோக்யா படத்தை இயக்கிவரும் வெங்கட் மோகன் அண்மையில் சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம்.

சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் டைட்டில் இதுதான் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

எல்லாம் சரியாக சென்றால் இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

அயோக்யா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் வெங்கட் மோகன், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.