Sivakarthikeyan Next Movie Update

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan Next Movie Update : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் இவர்களது கூட்டணி இணையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.