Sivakarthikeyan Next Movie Update
Sivakarthikeyan Next Movie Update

சூப்பர் டூப்பர் தெலுங்கு பட ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Sivakarthikeyan Next Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் இந்த அசுர வளர்ச்சி தமிழ் சினிமா உள்ள பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இறுதியாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்திருந்த நம்ம வீட்டுப்பள்ளை திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற படமாக அமைந்தது.

நாயகி Serial-லிருந்து விலகினேனா..,?? உண்மையை உடைத்த வித்யா பிரதீப்..!

இந்தப் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் அயலான், டாக்டர் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றனர்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் தெலுங்கு அல்லு அர்ஜுன், பூஜா ஹாக்டே படிப்பில் தமன் இசையில் வெளியாகி செம ஹிட்டடித்த அளவைகுந்தபுரமுலோ படத்தின் ரீமேக்கை சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட கைப்பற்றியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இப்படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்க எஸ் கே ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.