Ajith Sivakarthikeyan
தல அஜித்தின் தற்போதைய ரூட்டிற்கு சிவகார்திகேயனும் மாறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி தன்னை வளர்த்து கொண்டு வெள்ளித்திரையில் காமெடியான கலக்கி தற்போது ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது மித்ரன் இயக்கத்தில் நடித்துள்ள ஹீரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 20-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார், மேலும் சமீபத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து போனி கபூரை சந்தித்து பேசி இருந்தனர்.

போனி கபூர் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்க உள்ளார். அதற்கான சந்திப்பு தான் இது என கூறப்டுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.