Sivakarthikeyan Next month Plan : Anu Emmanuel, Aishwarya Rajesh,Sivakarthikeyan , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Sivakarthikeyan Next month Plan  :

அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பை தேனியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம் இந்த படமும் கிராமத்தை மையப்படுத்திய குடும்பப் படமாக உருவாகி வருகிறது.

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க. மேலும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது இதை தொடர்ந்து அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பை தேனியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம் இந்த படமும் கிராமத்தை மையப்படுத்திய குடும்பப் படமாக உருவாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.