சிவகார்த்திகேயன் குறித்து சுவாரசியமான தகவலை பிரபல கிரிக்கெட் வீரர் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரை மூலம் மக்கள் மனதை கவர்ந்து வெள்ளி திரையில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக மாறி பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனராக மாற இருக்கும் சிவகார்த்திகேயன்!!… பிரபல கிரிக்கெட் வீரர் பகிர்ந்துள்ள வேற லெவல் தகவல்.!

இப்படத்திற்கான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிரிக்கெட் விளையாட்டில் பிரபல கிரிக்கெட் வீரராக இருக்கும் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றை நடிகர் சிவகார்த்திகேயன் இயக்கி, நடிக்க இருக்கிறார்.

இயக்குனராக மாற இருக்கும் சிவகார்த்திகேயன்!!… பிரபல கிரிக்கெட் வீரர் பகிர்ந்துள்ள வேற லெவல் தகவல்.!

சினிமாவில் சிறந்த நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை அடுத்தடுத்து வெளிப்படுத்தி வரும் சிவகார்த்திகேயன் இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாற இருக்கிறார். இது குறித்து தகவல்களை கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.