சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்க இருக்கும் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தின் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் “SK21” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் தொடங்கியது. இந்த நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க இருக்கும் இயக்குனர் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

அதன்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த “டான்” திரைப்படம் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் நடிகர் சிவா மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும். இப்படம் 2024 இல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.