டாக்டர் பட வெற்றியால் அடுத்த படத்திற்கான வில்லனை தேடி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan Movie Villian Update : தமிழ் சினிமாவின் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அட்லீயின் உதவி இயக்குனர் இயக்கத்தில் உருவாக உள்ள சிங்க பாதை என்ற படத்தில் நடிக்க உள்ளார். டாக்டர் படத்தில் வினய் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். இதனால் இந்த படம் 100 கோடி வசூலைத் தாண்டியது.

வேலூரில் ஒரே நாளில் 7 முறை நில அதிர்வு : வீட்டை விட்டு வெளியேறினர் மக்கள்..

இதன் காரணமாக சிங்க பாதை படத்திலும் பிரபல ஹீரோ ஒருவரை வில்லனாக களம் இறக்க அவர் முயற்சி செய்து வருகிறார். இதற்காக நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு அடுத்ததாக பிரிதிவிராஜிடம் பேச அவர் மலையாளத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருவதால் இதற்கு நோ சொல்லியுள்ளார்.

மேடையில் திடீரென தேம்பி அழுத Bachelor பட நாயகி Divya BHarathi | Bachelor Press Meet

இதன் காரணமாக தற்போது பாலிவுட் நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைக்கின்றது. இந்த படத்தில் பிரபல ஹீரோ வில்லனாக நடித்தால் 100 கோடி வசூலை இப்படம் தாண்டும் என சிவகார்த்திகேயன் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.