Sivakarthikeyan
Sivakarthikeyan

Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் தற்சமயம் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸ்ராக நடிப்பதாகவும் இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியிருப்பதாகவும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

இந்நிலையில் இத்தகவலை படக்குழுவே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் தற்போது படமாக்கப்படும் காட்சிகளின் விஷுவல் தரம் பிரமிக்க வைப்பதாகவும் படக்குழு டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

தளபதி 63 கதை திருட்டு புகார் – எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட அதிரடி அறிக்கை.!

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இப்படத்தில் இவானா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த படம் போக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்திலும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் கோகோ நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்திலும் என சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.