Sivakarthikeyan Movie Updates
Sivakarthikeyan Movie Updates

Sivakarthikeyan Movie Updates : நடிகர் சிவகார்த்திகேயன் தற்சமயம் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

இதைதொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கம் புதிய படமொன்றிலும் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தின் டைட்டில் எல்.ஐ.சி என நாம் ஏற்கனவே ஒரு தகவலை அறிவித்திருந்தோம்.

இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் இவருடன் இரண்டு நாயகிகள் சேர்ந்து நடிக்கிறார்களாம்.

சிவா, விஜய் சேதுபதியை தொடர்ந்து பெண்ணாக மாறிய பிரபல நடிகர் – வைரலாகும் புகைப்படம்.!

அதாவது ஹீரோ படத்தில் கல்யாணி பிரியதர்ஷன, இவானா ஆகியோர் நடிப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு இரண்டு நாயகிகள் ஜோடியாம்.

சிவகார்த்திகேயன் படத்துக்காக மீண்டும் இணையும் கத்தி கூட்டணி!

இதுபோக பாண்டிராஜ் இயக்கம் படத்திலும் இவருடன் ரெண்டு முன்னணி ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம்.

இதில் ஐஷ்வர்யா ராஜேஷ் தங்கையாக நடிப்பதாகவும் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிறமொழி நடிகை ஒருவர் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.