Sivakarthikeyan Movie Update
தனது நேரடி முதல் தெலுங்கு படத்தில் நடித்து உள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan Movie Update : வளர்ந்து வரும் இளம் மற்றும் முன்னணி நடிகர்களில் சிவகார்த்திகேயன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். சென்ற வருடம் அவர் அவரின் நண்பன் அருண் இயக்கிய “கனா” படத்தை தயாரித்து அதில் நடிக்கவும் செய்தார்.

“கனா” படம் முழுக்க விளையாட்டு மற்றும் விவசாயம் இரண்டையும் மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். இந்த படத்திற்கு முன் ஜீவா, வெண்ணிலா கபடி குழு போன்ற படங்கள் முழுவதும் விளையாட்டை மைய்யப்படுத்தி உருவானது.

கமல்ஹாசனின் ஹிட் பாடலை அழகாக பாடலை பாடும் தளபதி விஜய் – கமல்ஹாசன்60 ஸ்பெஷல் வீடியோ.!

ஆனால், “கனா” படம் முழுக்க பெண்களின் கிரிக்கெட் விளையாட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் படம் இதுதான். இந்த படம் இப்பொது தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டு டீசர் வெளியாகி இருந்தது. அந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த “ரெமோ” படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது. சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கு படத்தில் நடித்த முதல் படம் இதுதான். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த மாதம் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.