நடிகர் கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan Meet With Goundamani : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட காமெடி கலந்து திரைப் படங்களின் மூலம் ரசிகர்களை தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

இன்றைய ராசி பலன்.! (24.8.2021 : செவ்வாய்க் கிழமை)

இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Live In Relationship நல்ல Concept தான்.., ரொம்ப பேருக்கு நம்பிக்கை இல்ல | Aadhalinaal Kadhal Seiveer

இந்த நிலையில் தற்போது இவர் நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து உள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு எப்போதும் தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர். அவருடனான சந்திப்பு கலகலப்பான தருணம். வாழ்க்கையில் மறக்கமுடியாத குறித்து வைக்க வேண்டிய நாள் என்று கூறி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.