சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan Maaveeran movie new poster viral:

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் அதிதி சங்கர், யோகி பாபு, சரிதா, மிஷ்கின் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

வித்தியாசமான ஆக்சன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு மாவீரன் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.