நடிகர் சிவகார்த்திகேயனின் தீவிரமான ரசிகர்கள் அவர் கிரிக்கெட் ஆடிய வீடியோவை வெளியிட்டு ரசித்து வருகிறார்கள்.

சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் தற்போது டாப் ஹீரோவாக வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்று சொல்லலாம்.

வெறிக்கொண்டு கிரிக்கெட் ஆடிய சிவகார்த்திகேயன்.. அவர் எது செய்தாலும் ரசித்து வரும் ரசிகர்கள்.!

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தீவிரமாக பிரின்ஸ், மாவீரன் போன்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

வெறிக்கொண்டு கிரிக்கெட் ஆடிய சிவகார்த்திகேயன்.. அவர் எது செய்தாலும் ரசித்து வரும் ரசிகர்கள்.!

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது அவர் தீவிரமாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கும் வீடியோ பதிவினை ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மை மேன், க்யூட் பிளேயிங் என்றெல்லாம் கமெண்ட் செய்து ரசித்து வருகின்றனர். இதனால் சிவகார்த்திகேயனின் இந்த கிரிக்கெட் ஆடும் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.