மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் பேட்டி வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்மி மேனாக நடிக்க இருக்கும் சிவகார்த்திகேயன் அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் மாமன்னன் படம் குறித்தும் மாற்று சினிமாக்கான வரவேற்பு குறித்து பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

அதில் அவர், “ரகுமான் சார் , உங்க டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் டெலிபோன் மணிபோல் சாங் செம்ம இளமையா இருக்கு.. ஆனா எனக்கு தான் வயசு ஆயிடுச்சு. நானும் மாரி செல்வராஜ் பிரதரும் ஒண்ணா கிரிக்கெட்லாம் விளையாடி இருக்கோம். அப்போ அவர் ஒழுங்காக கிரிக்கெட் ஆடல, ஆனா எடுத்த படம் எல்லாமே சிக்சர் தான்.

பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜ் சிறந்த இயக்குனர் என்று உலகிற்கு எடுத்துரைத்தது. இன்று வெற்றி மாறன் சாருக்கு கிடைத்த வரவேற்பு அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. மாற்று சினிமாக்கான முயற்சியை எடுத்து கைத்தட்டல்களுக்குச் சொந்தமாகியிருக்கிறார். அதை தொடங்கி வைத்தது கமல் சார் தான். விதை கமல் சார் போட்டது” என்று கூறியிருக்கிறார். இவரது இந்த பேச்சு அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.