சிவகார்த்திகேயனுடன் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan Join With KamalHaasan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் இவர் தெலுங்குவில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இவர்தான் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இயக்குனரும் கூட.

விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசு முக்கிய செய்தி

ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் உலக நாயகன் கமல் ஹாஸனுடன் சிவகார்த்திகேயனுக்காக எழுதிய கதையை சொல்ல அந்த கதை அவருக்கு பிடித்து போய் இந்த படத்தை தயாரிப்பதாக கூறியுள்ளார். இதனால் தனது நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை தயாரித்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தை தயாரிக்க முடிவு எடுத்துள்ளார்.

திரை பிரபலங்கள் கலந்துகொண்ட “ROCKY” படத்தின் சிறப்பு காட்சி..! | Sathyam Cinemas | Vasanth Ravi | HD

இதன் மூலம் இருவரும் முதல் முறையாக கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி இரு கூட்டணி யாரும் எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.