டாக்டர் திரைப்படம் கொடுத்த விஸ்வரூப வெற்றியால் சிவகார்த்திகேயன் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Sivakarthikeyan in Upcoming Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி வெளியான திரைப்படம் டாக்டர். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் நாளில் மட்டும் 7 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

17-ந்தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தான் அணி சீருடையால் சர்ச்சை

டாக்டர் கொடுத்த விஸ்வரூப வெற்றி.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்களுக்கு செம்ம ஹாப்பி நியூஸ்.!!

படக்குழுவே எதிர்பாராத அளவிற்கு டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததைத் தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்க பச்சைக் கொடி காட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.

கடைசியா Vivek Sir என்கிட்ட இதான் சொன்னாரு – மேடையில் கண்கலங்கிய Sundar C | Aranmanai 3 Press Meet

நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைய உள்ள இந்த படத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.