Sivakarthikeyan in Thalapathy 65

தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயனும் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Sivakarthikeyan in Thalapathy 65 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்று ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இதனை தொடர்ந்து உருவாக உள்ள தளபதி 65 படத்தினை நெல்சன் திலிப் குமார் இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.

இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் இதற்கு முன்னதாக நெல்சன் திலிப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் கல்யாண வயசு பாடலை எழுதியிருந்தார்.

இதனை தொடர்ந்து இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள டாக்டர் இத்திரைப்படத்தில் செல்லம்மா மற்றும் சோ பேபி என இரண்டு பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இதனால் தளபதி விஜய், நெல்சன் திலிப் குமார் இணைய உள்ள தளபதி 65 படத்தில் பாடலுக்கு நிச்சயம் வரிகளை எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.