உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK21 படத்திற்கான டைட்டில் வெளியிட்டுள்ளார்.

Sivakarthikeyan in SK 21 Movie Title : சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகர் தான் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன். தற்போது அவர் நடிப்பில் வெளியாகி வரும் அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் SKவின் டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படம் வெளியானது.இந்த டான் படம் தற்போது வெளியான மற்ற படங்களின் வசூலை விட அதிகமான வசூலை பெற்றிருக்கிறது.

SK21 படத்தின் டைட்டிலை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்-உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.

இதில் சிவகார்த்திகேயன் மிக க்யூட்டாக நடித்திருந்தார். மேலும் இந்த படம் நிறைய ஏமோஷன்ஸ் காமெடி போன்ற கலவைகளை கொண்டுள்ளதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் இயக்கும் SK20 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக இவர் SK21 என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

SK21 படத்தின் டைட்டிலை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்-உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.

இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறார். மேலும் இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளார்கள். இந்த படத்திற்கு ஹீரோயினாக சாய்பல்லவியை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது உதயநிதிஸ்டாலின் அவர்கள் SK21 படத்திற்கான டைட்டில் “மாவீரன்” என்று ஒரு பேட்டியில் வெளியிட்டுள்ளார். இதை அறிந்ததும் ரசிகர்கள் மிக உற்சாகம் அடைந்துள்ளனர்.