சிவகார்த்திகேயன் பட டைட்டில் ஆக மாறியுள்ளது ரஜினி பட டயலாக்.

Sivakarthikeyan in Singapathai Movie : தமிழ் சின்னத்திரை சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் பன்முகத் திறமைகளுடன் பணியாற்றி வருகிறார்.

திருவோணம் திருவிழா : இதில், தமிழர் பண்பு என்ன?

இவரது நடிப்பில் டாக்டர், அயலான் என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளனர். இந்த படங்களை தொடர்ந்து டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

Valimai & Maanaadu இரண்டாவது சிங்கிள் எப்போது Release? – அப்டேட் சொன்ன Venkat Prabhu! 

இந்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இணைந்து நடித்த ஒரு படத்தில் பேசும் சிங்க பாதை என்ற டயலாக் டைட்டில் ஆக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்க பாதை படத்தின் ஷூட்டிங்கும் வெகு விரைவில் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.